Published : 15 Feb 2022 10:58 AM
Last Updated : 15 Feb 2022 10:58 AM

சட்டப்பேரவையை முடக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி அருகே கண்டனூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

காரைக்குடி

சட்டப்பேரவையை முடக்கு வதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரி வித்தார்.

காரைக்குடி அருகே புதுவயல், கண்டனூர் பேரூராட்சியில் காங்கி ரஸ், திமுக கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த சிதம்பரம் பேசியதாவது:

ஓபிஎஸ், இபிஎஸ் 8 மாதங்களிலேயே திமுக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற் றவில்லை என்று கூறுகின்றனர். இது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கி றார்களா ? அல்லது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனரா ? என்று தெரியவில்லை.

ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக கொடுத்த வாக்குறு திகளை நிறைவேற்றுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த 8 மாதங்களில் தடம் புரளாமல் திமுக ஆட்சி செய்து வருகிறது. மேலும் இபிஎஸ், ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது ஒரே நாளில் எல்லா திட்டங்களையும் செய்து விட்டார்களா? அவ்வாறு செய்ய முடியுமா ?

இருக்கும் நிதி ஆதாரங்களை பொறுத்து படிப்படியாகத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். மேலும் குடும்பத் தலைவிக்கு ரூ1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறி யதாவது:

சட்டப்பேரவையை முடக்குவோம் என பேச்சளவில் சொல்லலாம். அரசியல் சாசனம் தெரியாதவர்கள், படிக்காதவர்கள் தான் இதுபோன்று பிதற்றுவர். சட்டப்பேரவையை முடக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சட்டப்பேரவையை முடக்குவது எளிதான காரியமல்ல. மேலும் ஓபிஎஸ், இபிஎஸ் சட்டப் பேரவையை முடக்குவோம் என்றும், பாஜக தலைவர் அண் ணாமலை 2024-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றும் பேசுவது அர்த்தமில்லாத பிதற்றல் பேச்சு.

முன்னாள் முதல்வர்கள் அர்த் தமில்லாமல் பேசக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x