அடுத்த முறை விரிவாக்கத்தின்போது கண்ணனூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்: பிரச்சாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி

அடுத்த முறை விரிவாக்கத்தின்போது கண்ணனூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்: பிரச்சாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் கண்ணனூர் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று சமயபுரம் நால்ரோட்டில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “கண்ணனூர் (சமயபுரம்) பேரூராட்சியில் இம்முறை திமுக கூட்டணியில் போட்டியிடும் அனைவரையும் வெற்றி பெற வைக்க வேண்டும். இப்பேரூராட்சிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும். வீடு இல்லாதவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித் தரப்படும். அடுத்த முறை விரிவாக்கத்தின்போது, சமயபுரம் அடங்கிய கண்ணனூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்றார்.

அவருடன் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் எம்எல்ஏ, மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.கதிரவன் உள்ளிட்டோர் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in