42 வேட்பாளர்களை அறிவித்தது ஐஜேகே

42 வேட்பாளர்களை அறிவித்தது ஐஜேகே
Updated on
1 min read

பாஜக கூட்டணியில் ஐஜேகே சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 42 பேரை கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். மீதமுள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்’ என கூறப்பட்டுள்ளது. இதன்படி, உளுந்தூர்பேட்டை சபா ராஜேந்திரன், ரிஷிவந்தியம் எம்.செந்தில்குமார் உட்பட 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஐஜேகே கட்சியின் சொந்த சின்னமான கத்திரிக்கோல் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் பாரிவேந்தர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in