நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுவாரியான பிரதான மற்றும் வாக்காளர் துணைப்பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-02-2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வார்டுவாரியான பிரதான மற்றும் வாக்காளர் துணைப்பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான https://tnsec.tn.nic.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும், " உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள் (Know your Polling Station)" என்ற வசதியை பயன்படுத்தி, வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தும் மேற்படி விவரங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in