மாமல்லபுரம் பார்வையாளர் கட்டண உயர்வை கண்டித்து அறப்போராட்டம்: வைகோ

மாமல்லபுரம் பார்வையாளர் கட்டண உயர்வை கண்டித்து அறப்போராட்டம்: வைகோ
Updated on
1 min read

மாமல்லபுரத்தில் பார்வையாளர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை கண்டித்து ஏப்ரல் 6-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பல்லவர்களால் உருவாக்கப்பட்ட மாமல்லபுரம் சிற்பங்களை காண்பதற்கான பார்வையாளர் கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு ரூ. 30, சார்க் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 500, மற்ற நாட்டினருக்கு ரூ. 750 என உயர்த்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் சிற்பப் பகுதிகளில் திரைப்படம் எடுக்க 10 மணி நேரத்துக்கு ரூ. 1 லட்சமும், குறும்படம் எடுக்க ரூ. 50 ஆயிரமும் கட்டணம் நிர்ணயித்துள்ளனர், இது நமது கலையை உலகறியச் செய்யும் செயலா? கலையை முடக்கும் செயலா?

கட்டண உயர்வு குறித்து உள்ளூர் மக்களின் கருத்தையும், சுற்றுலா பயணிகளின் கருத்தையும் மத்திய அரசு கேட்கவில்லை. இந்த கட்டண உயர்வுக்கு மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை சுங்கக் கட்டணம், மாமல்லபுரம் பேரூராட்சியின் வாகன வரி கட்டணம், வாகனம் நிறுத்த கட்டணம் என கொள்ளையடிப்பது போல சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் பார்வையாளர் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது மாமல்லபுரம் மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் செயலாகும். பணம் இல்லையென்றால் மாமல்லபுரம் செல்ல முடியாது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 6-ம் தேதி மாமல்லபுரத்தில் எனது தலைமையில் மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமைக் குழு சார்பில் அறப்போராட்டம் நடைபெறும்'' என்று

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in