Published : 26 Apr 2016 09:16 AM
Last Updated : 26 Apr 2016 09:16 AM

அதிமுகவுக்கு நாஞ்சில் சம்பத், நிர்மலா பெரியசாமி பிரச்சாரம்

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து, தாந்தோணிமலை, கரூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நாஞ்சில் சம்பத் நேற்று பேசியது: 6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கப் போவது உறுதி. திமுக பொருளாளர் ஸ்டாலின், நாவை அடக்க வேண்டும். இல்லையேல் அடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவிடம் நேருக்கு நேர் பேசமுடியாத அவர், தெருக்களில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். திமுக வாக்கு வங்கி 20 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துவிட்டது. அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி டெபாசிட் இழக்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து வேலாயுதம்பாளையம் பகுதியிலும் பிரச்சாரம் செய்தார்.

அதேபோல் கரூர் தொகுதியில் அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசும்போது, “மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யப்போவதாக திமுக கூறுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடனை, மாநில அரசு எவ்வாறு தள்ளுபடி செய்ய முடியும்? மது அருந்துபவர்களை ஒரே நாளில் திருத்த முடியாது. அதனால்தான், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x