Published : 01 Apr 2016 12:30 PM
Last Updated : 01 Apr 2016 12:30 PM

ஜெயலலிதாவின் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராகும் பாக்கியம்கூட கருணாநிதிக்கு இல்லை: நடிகை விந்தியா பேச்சு

எம்ஜிஆர் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதிக்கு, முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராகும் பாக்கியம்கூட கிடைக்கவில்லை என நடிகை விந்தியா தெரிவித்தார்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பழங்கா நத்தத்தில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமை வகித்தார். நிர்வாகிகள் புதூர் கே. துரைப்பாண்டியன், சி.த ங்கம், வில்லாபுரம் ஜெ. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெ.சாலைமுத்து வரவேற்றார். ஆர்.கோபால கிருஷ்ணன் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நடிகை விந்தியா பேசிய தாவது: கருணாநிதி எனக்கு 92 வயதாகிறது. இதுதான் எனக்கு கடைசி தேர்தல் என்று கூறுகிறார். இதேபோல் கடந்த நான்கு தேர்தலாக வயதை காரணம் சொல்லி அனுதாபம் தேடி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார். இந்த முறையும் அவரது முதல்வர் பதவி ஆசை நிறைவேறாது. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராகும் பாக்கியம்கூட கிடைக்கவில்லை என்றார்.

அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியதாவது:

முதல்வர் ஜெயலலிதா, ஒரு கோடியே 96 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் விலையில்லா அரிசித் திட்டத்தை வழங்குகிறார். இதுபோன்ற திட்டம் அரிசி அதிகமாக விளையும் கர்நாடகம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உண்டா? ஏன் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்த கேரளம், திரி புரா, மேற்கு வங்கத்தில் செய ல்படுத்தியதுண்டா? சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் மக்கள் சவுகரியமாக இரு க்கிறார்கள். இந்த தேர்த லுக்குப்பின் தமிழகத்தில் எதிர் க்கட்சிகளே இருக்காது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x