

ஞாயிற்றுக்கிழமை நடந்த டிஎன்எஸ்பி குரூப்-2 தேர்வின் விடை கள் குறித்த துண்டுச் சீட்டு, தேர்வு முடிந்த சில நிமிடங்களிலேயே கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் கிடந்ததால், கடலூ ரில் முன்கூட்டியே வினாத்தாள் வெளியானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த டிஎன்எஸ்பி குரூப்-2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 821 பேர் தேர்வெழுதினர். தேர் வெழுதியவர்களில் பலர் பொது அறிவு மற்றும் கணிதம் ஆகிய இரு பாட வினாத்தாள்கள் கடின மாகவும், தமிழ் எளிதாக இருந்த தாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவர் கடலூர் திருவந்தி புரத்தில் உள்ள தேர்வு மையத் தில் தேர்வெழுதிவிட்டு, கடலூர் பேருந்து நிலையத்திற்கு திரும்பி யுள்ளார். அப்போது கடலூர் திருப் பாதிருப்புலியூர் ரயில் நிலையம் அருகே துண்டுச் சீட்டு ஒன்று கிடந்துள்ளது.
அந்த நபர் துண்டுச் சீட்டை எடுத்து பார்த்தபோது, அதில் குரூப்-2 தேர்வின் வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கான விடை கள் இருந்துள்ளன. இதையடுத்து அந்த நபர் தனது நண்பர்கள் வட்டாரத்தில் தகவலைக் கூறியுள் ளார். அந்த துண்டுச் சீட்டில் கடின மான வினாக்களுக்குரிய பதில் கள் இடம் பெற்றுள்ளன.தேர்வு முடிந்த சில நிமிடங்களிலேயே வினாத்தாளில் உள்ள கேள்விக ளுக்கான விடைகள் குறித்த துண்டுச் சீட்டு கிடைத்தது கடலூ ரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12-8-2012 அன்று நடந்த குரூப்-2 தேர்வின் போது இதே போன்று துண்டுச் சீட்டு கீழே கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் மறு தேர்வு நடத்தியது என்பது குறிப்பிடத் தக்கது. 2011-ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வின் போது கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை கிராமத் தைச் சேர்ந்த 60 பேர் தேர்வாகி னர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே கிராமத்தில் 60 பேர் தேர்வானது சந்தேகத்தை எழுப்பியதால் அங்கு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக கட லூரைச் சேர்ந்த சிலர் கைதாகி சிறை யில் இருக்கின்றனர். ஒரு சிலர் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.