Published : 13 Feb 2022 08:37 AM
Last Updated : 13 Feb 2022 08:37 AM

புவி கண்காணிப்புக்கான ‘இஓஎஸ்-04’ செயற்கைக் கோள் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை

புவி கண்காணிப்புக்கான ‘இஓஎஸ்-04’ செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி -சி52 ராக்கெட் மூலம் நாளை (பிப்.14) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-04 (ரிசாட்-1ஏ) என்றஅதிநவீன ரேடார் செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ளது. இது பிஎஸ்எல்வி-சி52 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

மொத்தம் 1,710 கிலோ எடைஉள்ள இஓஎஸ்-04 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இது புவியில் இருந்து 530கி.மீ. உயரத்தில், சூரிய ஒத்திசைவுசுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்த ரேடார் செயற்கைக் கோள்எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு பயன்படும். இதனுடன் இன்ஸ்பயர் சாட்-1, ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 2 சிறிய வகை செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதில் இன்ஸ்பயர் சாட்செயற்கைக் கோள் இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்பக்கழகம் (ஐஐஎஸ்டி), அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வகமாணவர்களின் ஒருங்கிணைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் செயற்கைக் கோள்இஸ்ரோவால் உருவாக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி-சி52 ராக்கெட் 2022-ம் ஆண்டின் முதல் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x