

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகளில் 102 உறுப்பினர் பதவிகள், 7 பேரூராட்சிகளில் 108 உறுப்பினர் பதவிகள் என 210 பதவிகளுக்கு வருகின்ற 19-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இப்பதவிகளுக்கு நக ராட்சிகள், பேரூராட்சிகளில் 935வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விழுப்புரத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டி யிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேச விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே மேடை அமைக்கப்பட்டது. ஆனால் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மேடையில் அமரவைக்காமல் அவர்கள் மேடையில் பக்கவாட்டு பகுதியில்அமரவைக்கப்பட்டனர். மேடை யில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் வழக்கம் போல அமர்ந்தனர்.
மேடைக்கு வந்த பாஜக மாநி லத் தலைவர் அண்ணாமலை வேட்பாளர்கள் மேடையில் இல்லாததை கண்டு அதிர்ந்து, ஏன் அவர்களை மேடை மீது அமர வைக்கவில்லை என கட்சி நிர்வாகிகளை கடிந்து கொண்டார். பின்னர் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஒவ்வொரு வேட்பாளரிடம் பேசிவிட்டு, குருப் போட்டோ எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.