Published : 29 Apr 2016 09:20 AM
Last Updated : 29 Apr 2016 09:20 AM

234 தொகுதிகளிலும் ‘இரட்டை இலை’ வெற்றி பெற ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமே அதிமுகவினர் பணியாற்ற வேண்டும்: ஜெயலலிதா வேண்டுகோள்

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண் டும். அதற்கு அதிமுக தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் பணி யாற்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என முதல்வர் ஜெய லலிதா வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இது தொடர்பாக தொண்டர் களுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எந்நாளும் தங்கள் குடும்பத் தின் வசமே ஆட்சி அதிகாரம் அனைத்தும் இருக்க வேண்டும் என்று துடிக்கும் தீயசக்திகள், அதன் நச்சு விழுதுகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். ஏழை, உழைக்கும் மக்களுக்கு அதிகாரத்தில் பங்க ளிக்கும் அதிமுகவின் புரட்சிகர அரசியல் பயணத்தை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும். இவற் றுக்காக நடப்பதுதான் இந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குடும்ப ஆட்சிமுறை, மக்க ளாட்சி தத்துவத்துக்கு முற்றி லும் விரோதமானது. ஒரே குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி யையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் முழு மையாக தங்களுக்குள் வைத்திருப்பது, அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற மக்களாட்சி தத்துவத்தின் அடித்தளத்தையே சின்னாபின்னப்படுத்திவிடும். வாரிசு அரசியல் முறையை தமிழகத்தில் இருந்து முற்றி லுமாக ஒழிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தற் போதைக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு செழிக் கும் வகையில் பல்வேறு திட் டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். இதற்கு நாம் வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும்.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் நியமிக்கப் பட்டுள்ள தொகுதிக் குழு ஒன் றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிக் குழு, மண் டலக் குழு, பூத் கமிட்டியின் உறுப் பினர்கள், நிர்வாகிகள், தொண் டர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களை தினமும் சந் தித்து, இந்த ஆட்சியின் நற்செயல் களை விளக்கிக் கூறுங்கள்.

தொகுதிக்குழு பொறுப்பாளர் கள், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண் டர்கள் அவரவர் சார்ந்த சட்டப் பேரவை தொகுதிகளில் பணி யாற்றுவது மிகவும் அவசியம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகு திகளைத் தவிர மற்ற தொகுதி களில் பணியாற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழக அரசியல் வர லாற்றில் முதல்முறையாக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் இந்தத் தேர்த லில் போட்டியிடுகிறது. 234 தொகு திகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டில் சரித்திர சாதனை படைக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் நானே களத்தில் நிற்கிறேன் என்ற உணர்வுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

என் கட்டளையை ஏற்று, அதிமுக தொண்டர்கள் ஒவ் வொருவரும் கடமை உணர்வுடன் தேர்தல் பணியாற்றி, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x