

தென்னிந்தியாவில் முதன்முறை யாக புதுச்சேரியில் தமிழ் மண்ணில் பாஜக கூட்டணி ஆட்சி இங்கு நடந்து கொண்டிருப்பது பெருமையாக இருக்கிறது. பிரதமரின் வழிகாட்டு தலின் பேரில், மக்களின் எண் ணங்களை நிறைவேற்றும் விதமாக செயல்பாடுகள் இருக்கின்றன என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி வருகை தந்த அவர் நேற்று மாலை பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
சுயசார்பு பொருளாதாரத்தை பெருக்கி நம்முடைய நாட்டில் இருந்து பொருட்கள் பிற நாடுக ளுக்கு செல்ல வேண்டும் என்பதே பிரதமரின் கனவாக இருக்கிறது. பிரதமரின் ‘கதி சக்தி’ திட்டத்தால் இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளை ஏற்படுத்துவதன் மூலம் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். கடந்த70 ஆண்டுகளில், பிரதமர் மோடிவந்த பிறகுதான் மீனவர்களுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டு ரூ.20ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டி ருக்கிறது. மீன்வள கட்டமைப்பு, துறைமுக மேம்பாடு, கடல் பாசி வளர்ப்பு, இறால் ஏற்றுமதி போன்ற திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.
தென்னிந்தியாவில் முதன் முறையாக தமிழ் மண்ணில் பாஜக கூட்டணி ஆட்சி இங்கு நடந்து கொண்டிருப்பது பெருமையாக இருக்கிறது. புதுச்சேரியில்மிகப்பெரிய அளவில் அரசின்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டு கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி முதல்வர், அமைச்சர்கள் சிறப்பான ஆட்சியைத் தருகின்றனர். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் விதமாக செயல்பாடுகள் இருக் கின்றன.
மீனவர்களுக்காக..
இலங்கை கடற்படையால் பிடிபடும் மீனவர்களை மீட்பதில் மிக முனைப்போடு இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் அவர்களை மீட்கிறோம்.
2014-ம் ஆண்டுக்கு முன்பு துப் பாக்கிச் சூடு சம்பவம் தினந்தோறும் நடந்து கொண்டிருந்தது.
அதன்பிறகு ஒரு துப்பாக்கிச் சூடு கூட கிடையாது. அந்தளவில் நம்முடைய மீனவர்கள் பாதுகாப் பாக இருக்கின்றனர். மீனவர்கள் எல்லைப் பிரச்சினைகளை உடனடியாக அறிந்துகொள்ள கப்பல் களில் நவீன வதிகளை பொருத்த அறிவுறுத்துகிறோம். இதனையும் மீறி சில நேரங் களில் மீன்வளத்துக்காக எல்லைதாண்டுதல் நடந்து கொண்டிருக்கி றது. இந்தியா- இலங்கை இடையே குறுகிய எல்லையாக இருப்பதே இதற்கு காரணம். இதில் சுமூகத் தீர்வை காண இருநாட்டு அதிகா ரிகள் அடங்கிய கூட்டுக்குழு கூட்டம், மீண்டும் கூட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியா ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் எந்த கட்சியிலும் இருக்கலாம். ஒடுக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட கட்சியில் தான் இருக்கவேண்டும் என்பது கிடையாது. இந்தியாவிலேயே அதிகமான ஒடுக்கப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பாஜகவில் தான் இருக்கிறார் கள். அண்டை மாநிலமான கர்நாடகாவில் பட்டியலின அமைச்சர் முதல் வருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தமிழகத்தில் எங்கே இருக்கிறார் என்பதை திருமாவளவன் கேட்க முடியுமா?
சிறுவயதில் இருந்தே நான் பாஜகவின் கோட்பாடுகளை ஏற்றுள்ளேன். ‘தீண்டாமையை கடைபிடிக்க மாட்டேன்’ என்று உறுதிமொழி ஏற்பவர்கள் தான், பாஜகவில் உறுப்பினராகவே சேர முடியும். பாஜகவுக்கு யாரும் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. எங்கள் கட்சியை எவ்வாறுநடத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். திருமாவளவன் தற்போது மிகுந்த பயத்தில் இருக்கிறார். பட்டியலின மக்கள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பாஜக பக்கம் அதிகமாக வந்துள்ளனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் பேசுகிறார்.
வரும் 5 மாநில தேர்தலில் அதிகஇடங்களுடன் பாஜக ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் நாங்கள்செல்லும் இடமெல்லாம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய தேர்தலாக உள்ளாட் சித் தேர்தல் இருக்கும். ‘பாஜக ஏன் தனித்து போட்டியிடுகிறது?’ என்று சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல. கச்சத்தீவை திமுக தான் தாரைவார்த்துக் கொடுத்தது. இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிறார்கள் என்று தெரிவித்தார்.