

ரூ.3 கோடி மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி. ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை ஜன. 5-ம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து, ஜன.13-ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எப்போது விசாரணைக்கு அழைத் தாலும் நேரில் ஆஜராவேன் என்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவர் கடிதம் அளித்திருந்தார்.
அதன்படி கடந்த 31-ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான ராஜேந்திர பாலாஜி, தான் கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார். அவரை திருப்பி அனுப்பிய போலீஸார், சிகிச்சை முடிந்து கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்ற பின்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவு றுத்தினர்.
இந்நிலையில், மீண்டும் விசார ணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜிக்கு போலீஸார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பினர். அதையடுத்து நேற்று காலை விருதுநகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜரானார். அவரிடம் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் குறித்து எஸ்பி மனோகர், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.