Published : 13 Feb 2022 12:44 PM
Last Updated : 13 Feb 2022 12:44 PM
நாகர்கோவில் அருகே இலந்தயடிதட்டை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்(56). இவர், நாகர்கோவில் பட்டகசாலியன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு நேற்று காலை மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதே மருத்துவமனைக்கு அவரை உறவினர்கள் அழைத்துச்சென்றுள்ளனர். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. 15 நிமிடத்துக்கு மேல் மருத்துவமனை வளாகத்திலேயே அவரைவைத்திருந்த நிலையில் வெங்கடேஸ்வரன் உயிரிழந்தார்.
இதை அறிந்த இலந்தையடித்தட்டு மக்கள் மற்றும் வெங்கடேஸ்வரனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர்.
இதயநோயாளிக்கு சிகிச்சைஅளிக்க காலதாமதம் ஆனதாலேயே மரணம் ஏற்பட்டதாக கூறிமருத்துவமனையை வெங்கடேஸ்வரனின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. உட்பட பலர் கலந்து கொாண்டனர்.
பேராட்டம் நடத்தியவர்களுடன் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT