Published : 13 Feb 2022 11:42 AM
Last Updated : 13 Feb 2022 11:42 AM

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் திமுக மீது மக்களுக்கு அதிருப்தி: அர்ஜூன் சம்பத் கருத்து

ஆம்பூர்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் திமுக மீது மக்கள் பெரிய அதிருப்தியில் உள்ளதாக இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் உள்ள 8 வார்டுகளில் பா.ஜ.க., ஒரு வார்டிலும், இந்து மக்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9 வேட்பாளர்களுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

500 கோடி ரூபாய் வரை ஊழல்

பின்னர் அவர், செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘ஆளும் திமுக அரசு கடந்த 8 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் 500 கோடி ரூபாய் வரை ஊழல் நடை பெற்றிருக்கிறது.

பொங்கல் பொருட்கள் வழங்கியதில் மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் வரும் 14-ம் தேதி (நாளை) கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக என்ஐஏ விசாரணை கோரிக்கையும், ஆளுநரை அவமானப்படுத்தி பேசக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நீட்தேர்வு தமிழகத்துக்கு அவசியத்தை வலியுறுத்தி 1 கோடி கையெழுத்துகளை வாங்கி மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம்’’ என்றார்.

ஆளுநரை அவமானப் படுத்தி பேசக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நீட்தேர்வு தமிழகத்துக்கு அவசியத்தை வலியுறுத்தி 1 கோடி கையெழுத்துகளை வாங்கி மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x