கர்நாடக ஹிஜாப் விவகாரம்: மதுரையில் முஸ்லிம் பெண்கள் போராட்டம்

 படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
 படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: கர்நாடக ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அம்மாநில பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மதுரையில் முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஹிஜாப் (முக்காடு), புர்கா (முழு நீள உடை) அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையொட்டிய போராட்டங்களும், எதிர் போராட்டங்களும் நடந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், கர்நாடகா பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லிம் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வருவதை கர்நாடக பாஜக அரசு தடுப்பதாக கூறி, மதுரை பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று (சனிக்கிழமை) நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் பெண்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in