

தமிழகம் முழுவதும் கடந்த9 மாதத்தில் 81 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமயஅறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பழுதுபார்ப்பு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டுமே 7-ம் தேதி முதல் பிப்.11-ம்தேதி வரை இந்து சமய அறநிலையத் துறை ஆணையரால் அனுமதி வழங்கப்பட்டு, சென்னை வடபழனி முருகன் கோயில், வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளிட்ட 56 கோயில்கள், மண்டல இணை ஆணையர்களால் அனுமதி வழங்கப்பட்டு, கந்தர்வகோட்டை அங்காள பரமேஸ்வரி கோயில், திருப்பூர் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட 25 கோயில்கள் என மொத்தம் 81 கோயில்களுக்கு விமரிசையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.