ரயில் முனையமாக ராயபுரத்தை மாற்றுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் மனோ உறுதி

ரயில் முனையமாக ராயபுரத்தை மாற்றுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் மனோ உறுதி
Updated on
1 min read

ராயபுரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் ராயபுரம் மனோ, தான் வெற்றி பெற்றால் ராயபுரத்தை ராயல்புரமாக மாற்றுவேன் என்று தெரிவித்தார்.

நேற்று ராயபுரம் மாநகராட்சி வட்டார அலுவலகத்தில் அமைந் துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கே.பாலசுப்பிரமணியன் வேட்புமனுவை பெற்றுக் கொண்டார். வேட்புமனு தாக்கலின்போது, அவர் அளித்த பிரமாண பத்திரத்தில், தனது குடும்ப சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 80 லட்சம் என்றும், ரூ.1 கோடியே 39 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘நான் வெற்றி பெற்றால் ராயபுரத்தை ராயல்புரமாக மாற்றுவேன். நான் தொகுதி மக்களுக்கு 30 அம்சங்களைக் கொண்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளேன். அதில் முதல் அம்சம், ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்றுவது தான்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in