எட்டு மாத திமுக ஆட்சியில் 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கருத்து

நெகமம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.
நெகமம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.
Updated on
1 min read

பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் பேரூராட்சியின் 15 வார்டு களில், 8 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும், ஒரு வார்டில் சுயேச்சையும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், அந்த பேரூராட்சியை திமுக கைப்பற்றி யுள்ளது.

இந்நிலையில், மீதமுள்ள 6 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று முன்தினம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சியில் திமுக கூட்டணிசார்பில் போட்டியிடும் 35 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும்போது, “கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கரோனா நிவாரண நிதியாக ரூ.4,000, மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம், சுய உதவிக்குழு கடன், விவசாய கடன்கள் தள்ளுபடி, ஆவின் பால் விலை குறைப்பு, விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு என திமுக ஆட்சியில் 70 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை எட்டு மாதங்களில் நிறைவேற் றியுள்ளோம். இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக மு.க.ஸ்டாலின் நல்லாட்சி வழங்கி வருகிறார்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in