Published : 09 Apr 2016 08:36 PM
Last Updated : 09 Apr 2016 08:36 PM

கும்மிடிப்பூண்டியில் 11-ம் தேதி பிரச்சாரம் தொடங்குகிறார் விஜயகாந்த்: முதல்கட்டமாக 6 நாள் சுற்றுப்பயணம்

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது முதல்கட்ட பிரச்சாரத்தை கும்மிடிப்பூண்டியில் 11-ம் தேதி தொடங்குகிறார்.

இது தொடர்பாக தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 11-ம் தேதி (திங்கள்கிழமை) தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

அவரது பிரச்சார சுற்றுப்பயண விவரம்:

11-ம் தேதி திங்கள்கிழமை மாலை 4 மணி – கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் (கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், திருவொற்றியூர் தொகுதிகள்). மாலை 6 மணி – பெரவள்ளூர் சதுக்கம் (ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி), ராயபுரம் தொகுதிகள்).

12-ம் தேதி மாலை 4 மணி - தாம்பரம் சண்முகம் சாலை (செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர் தொகுதிகள்), மாலை 6 மணி – அம்பத்தூர் (அம்பத்தூர், மதுரவாயல், விருகம்பாக்கம், ஆலந்தூர் தொகுதிகள்), 14-ம் தேதி மாலை 4 மணி – செய்யூர் (உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதிகள்), மாலை 6 மணி –சோழிங்கநல்லூர் (சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகள்).

15-ம் தேதி மாலை 4 மணி திருத்தணி (திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி தொகுதிகள்), மாலை 6 மணி – வில்லிவாக்கம் (வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் தொகுதிகள்), 16-ம் தேதி மாலை 4 மணி – திருப்பத்தூர் (வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் தொகுதிகள்), மாலை 6 மணி – ஆற்காடு (அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, வேலூர் தொகுதிகள்).

17-ம் தேதி மாலை 4 மணி – செய்யார் (போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி) தொகுதிகள்), மாலை 6 மணி -திருவண்ணாமலை (செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் தொகுதிகள்) ஆகிய இடங்களில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு, மாமண்டூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது. விஜயகாந்த பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால், இந்த மாநாட்டில் தேமுதிக மற்றும் ம.ந.கூட்டணி கட்சிகளின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிகிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x