உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கரோனா விதிகளை கடை பிடிக்கவில்லை: நாம் தமிழர் கட்சி சீமான் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கரோனா விதிகளை கடை பிடிக்கவில்லை: நாம் தமிழர் கட்சி சீமான் குற்றச்சாட்டு
Updated on
1 min read

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கரோனா தொற்று விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு நோய் தொற்று பரவினால் யார் பதில் கூறுவது, என சேலத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் குரங்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது:

திமுக எதிர்கட்சியாக இருந்த போது ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் கையெழுத்திட்டு விடுதலை செய்யலாம் என்றனர். ஆளுங்கட்சியாக திமுக வந்து விட்ட நிலையில் ஏழு பேர் விடுதலையில் திமுக என்ன செய்து கொண்டிருக்கிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல லட்சம் கோடி நிதி திரட்டியும், முன்னேற்றப்பாதையில் நாட்டை பாஜக கொண்டு செல்லவில்லை. பசி, பட்டினி, வேலையின்மை, தனியார்மயமாக்கல் உள்ளிட் டவையால் மக்கள் பாதிப்படையும் நிலையில், மதம் சார்ந்த பிரச்சினையை ஏற்படுத்தி பாஜக அரசியல் செய்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கரோனா தொற்று விதி முறைகளை கடைபிடித்தே தேர்தல் பிரச்சாரம் செய்கிறது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி செல்லும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கரோனா தொற்று விதிமுறை கடைபிடிக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு நோய் தொற்று பரவினால் யார் பதில் கூறுவது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in