Published : 12 Feb 2022 08:10 AM
Last Updated : 12 Feb 2022 08:10 AM
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் டிக்கெட் எடுக்க கவுன்டரில் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.
தற்போது, தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் க்யூ.ஆர். கோடு தொழில்நுட்ப வசதியுடன், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்வே பயணிகள் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் வசதியை விரிவுப்படுத்தி வருகிறோம்.
அதன்படி, க்யூ.ஆர். கோடு மூலம் ஏடிவிஎம் (தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள்) டிக்கெட், நடைமேடை கட்டணம் உள்ளிட்டவற்றைப் பெறலாம். சீசன் டிக்கெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டார்ட் கார்டு, பிஎச்எம் யுபிஐ க்யூ.ஆர். கோடு, பேடிஎம், பிஎச்எம் யுபிஐ கோடு வழியாகவும் கட்டணம் செலுத்தலாம். இதற்கான முழு விளக்கத்தையும் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களின் திரையில் காணும்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தகவல்களைபெற 139 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். க்யூ.ஆர். முறையில் டிக்கெட் பெறுவோருக்கு 0.5 சதவீதம் கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT