

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் போட்டியிடும் திமுகமற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் களை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி நேற்று திட்டக்குடியில் தேர் தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்று 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமை யிலான அரசு பொறுப்பேற்ற நேரத்தில் அரசு கஜானா காலி. இருப்பினும் அதைக் காரணம் காட்டவில்லை. மாறாக மக்களுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதி களில் 90 சதவீதத்தை முதல்வர்ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். முந்தைய அரசின் செயல்பாடுக ளால் அரசின் நிதிநிலையை மக்கள்அறிந்து கொள்ளவே நிதிநிலை குறித்த அறிக்கை வெளியிட்டாரே தவிர, அதை வைத்து அரசியல் செய்ய அல்ல.
முன்னாள் முதல்வர் ஜெயல லிதா 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையின்போது செல்போன் வழங்கப்படும் என்றார். அதைநிறைவேற்றினார்களா? அதைய டுத்து வந்த பழனிசாமி தான் நிறைவேற்றினாரா? இல்லையே. இந்த நிலையில் திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றம் தொடர்பாக கேள்வி எழுப்ப பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?
மக்களவைத் தேர்தல் ஒரு லட்சி யத்திற்காகவும், சட்டப்பேரவைத் தேர்தல் மாநிலத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் தேர்தல். அதை முறையாக தமிழகமக்கள் செய்துள்ளனர். அது போன்று கவுன்சிலர்கள் தேர்தலும்முக்கியமானது. ஏனெனில் தமிழகமுதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்கள் கடைகோடி மக்களைசென்றடைய வேண்டும். அதற்குத் தான் திமுக வேட்பாளர்களை நிறுத்தி அவர்களுக்கு வாக்கு கேட்கிறோம். மாறாக வேறு யாருக் கேனும் வாக்களித்தால் அரசின் நோக்கம் கேள்விக்குறியாகும். எனவே திமுக அதன் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, இப்பகுதியில் உள்ள மக்களின் தேவையை நிறைவேற்ற துணை புரிய வேண்டும் என்றார்.
முன்னதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.