Published : 12 Feb 2022 10:19 AM
Last Updated : 12 Feb 2022 10:19 AM

ஹிஜாப் தொடர்பான சம்பவம் புதுச்சேரியில் நடைபெறவில்லை: கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

புதுச்சேரி

புதுச்சேரி கல்வித்துறையில் உள்ள74 தொடக்கப் பள்ளி ஆசிரியர்க ளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு ஆணை மற்றும்சமக்கர சிக்ஷாவில் ஒப்பந்த அடிப்ப டையில் உள்ள 59 ஆசிரியர்களுக்கு கல்வித்துறையில் நிரந்தர பட்ட தாரி ஆசிரியர்களாக பணி நியமனஆணை வழங்கும் நிகழ்ச்சி புதுச் சேரி கல்வித்துறை வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பணி பதவி உயர்வு மற்றும் பணிநியமன ஆணைகளை ஆசிரியர்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை செயலர் சுந்தரேசன், இயக்குநர் ருத்ரகவுடு ஆகியோ்ர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் நமச்சி வாயம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர், பதவியேற்ற வுடன், ‘புதுச்சேரி அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்’ என்று அறி வித்திருந்தார். அதனடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற் கான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

தற்போது கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள், பதவிஉயர்வுகள் நிரப்பப்பட்டு வருகின் றன. காவல்துறையில் 390 காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற் கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் நியாய மான, நேர்மையான முறையில் தகுதியின் அடிப்படையில் நிரப் பப்பட இருக்கிறது.எந்தவித அரசி யல் தலையீடும் இல்லாமல் தகுதி யின் அடிப்படையில் மட்டுமே பணிகள் கிடைப்பதற்குரிய உத்தரவாதத்தை முதல்வர் வழங்கியுள் ளார்.’’ என்றார்.

அப்போது அமைச்சரிடம், அரியாங்குப்பம் பள்ளியில் ஒரு மாணவியிடம் ஹிஜாப் அணியக் கூடாதுஎன்று பள்ளி தரப்பில் சொன்ன தாக வரும் தகவல் பற்றி செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் ‘‘புதுச்சேரி யில் ஹிஜாப் தொடர்பான சம்ப வங்கள் நடைபெறவில்லை. இருப்பினும் சில அரசியல் அமைப்பினர் விசாரணை நடத்தகோரிக்கை வைத்தனர். அதனடிப் படையில் கல்வித்துறை இணை இயக்குநர் தலைமையில் குழு அமைத்துள்ளோம்.

அவர்கள் விசாரணை செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள். அந்த அறிக்கை தாக்கல் செய்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதுச் சேரி மாநிலத்தில் ஹிஜாப் தொடர்பான சம்பவத்துக்கே இடம் கிடை யாது’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x