Published : 28 Apr 2016 08:01 AM
Last Updated : 28 Apr 2016 08:01 AM

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உட்பட 1079 பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி அறிவிக்கை: ஆக.7-ல் முதல்நிலைத் தேர்வு

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட 24 விதமான பதவி களுக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டு வரு கிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத்தேர்வு (எழுத்து மற்றும் நேர்காணல்) என 2 நிலைகளைக் கொண்டது.

நடப்பாண்டு 1,079 காலியிடங் களை நிரப்புவதற்கான அறிவிக் கையை யுபிஎஸ்சி நேற்று வெளி யிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடத்தப்படும். ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். 21 முதல் 32-க்குள் வயது இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியுள்ள பட்டதாரிகள் மே 27-ம் தேதிக்குள் இணையதளம் மூலம் (www.upsconline.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் (www.upsc.gov.in) விரிவாக அறிந்துகொள்ளலாம் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x