

வேலூர் மாநகராட்சியின் 1-வது வார்டில் திமுக வேட்பாளராக கட்டிட ஒப்பந்ததாரர் கே.அன்பு போட்டியிடுகிறார். இவர், கடந்த 3 முறை 1-வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் கவுன்சிலராக பதவி வகித்த போது கல்புதூர் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது மாநகராட்சி 1-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் அன்பு இந்த முறை மக்கள் தன்னை மாமன்ற உறுப்பினராக தேர்ந் தெடுத்தால் வீட்டுக்கு தினசரி 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசம்,கல்புதூரில் சமுதாய கூடம், நடைபயிற்சி பாதை அமைக்கப்படும்.உடற்பயிற்சி கூடம், மாணவ, மாணவிகள் பயன்பெற நூலகம் அமைக்கப்படும்.
செங்குட்டை, நேரு தெரு, பாரதியார் தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா பெற்று தரப்படும். செங்குட்டை நேரு தெருவில் பூங்கா, அம்பேத்கர் நகர், அறிஞர் அண்ணா நகர், ராஜீவ்காந்தி நகரில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதி அமைக்கப்படும். எம்ஜிஆர் நகரில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்.
விவேகானந்தா நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். 1-வது வார்டு மக்களுக்கு குடிநீருக்கான குழாய் வரியை ஒரு ஆண்டுக்கு நானே எனது சொந்த செலவில் கட்டி தருவேன். கல்புதூர் பக்கிரி குளக்கரை பகுதியில் பெண்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக சுற்றுச்சுவருடன் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி அங்கு நடைபாதை அமைக்கப்படும்.
1-வது வார்டிலேயே எனது அலுவலகம் இருப்பதால் பொதுமக்கள் எந்நேரமும் என்னை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்தால் உடனடியாக அந்த பிரச்சினை தீர்க்கப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியில் கே.அன்பு தெரி வித்துள்ளார்