

நீட் விவகாரம் குறித்து பேசுவதற் காக கொடுத்த வாய்ப்பை எதிர்கட்சித்லைவர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தவில்லை என திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.
ராணிப்பேட்டை நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில், திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ‘‘நீட் விவகாரம் குறித்து பொது விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலினை, பழனிசாமி அழைத் துள்ளார். எடப்பாடி பழனிசாமி சிறந்த கல்விமான், மேதை என்று சட்டசபையில் அவருக்கு பேச வாய்ப்பளித்தபோது பயன்படுத்தாதவர். இப்போது விவாதத்திலா பேசப்போகிறார்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பேசுவதற்கு சட்டப் பேரவையில் நேரம் அளிக்கப்பட்டது. எந்த இடத்திலும் நீட் குறித்து பேச அவருக்குவாய்ப்பு வழங்கப்படும்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கின்றபோது பாஜக அலுவலகம் தாக்கப்படுவதாக அண்ணாமலை குற்றஞ் சாட்டியுள்ளார்’’ என்றார்.