Published : 18 Apr 2016 09:19 AM
Last Updated : 18 Apr 2016 09:19 AM

பாமக 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பென்னாகரத்தில் அன்புமணி போட்டி

பாமகவின் 3-வது வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) காலை வெளியிடப்பட்டது. தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். அன்புமணி தற்போது தருமபுரி தொகுதி எம்.பி.யாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 117 பேர் கொண்ட இரு வேட்பாளர் பட்டியல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து 90 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாவது பட்டியல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் பட்டியல்:

1. பென்னாகரம் - அன்புமணி ராமதாஸ்

2. மேட்டூர் - ஜி.கே.மணி

3. வந்தவாசி (தனி) - வடிவேல் ராவணன்

4. திருத்தணி - அ. வைத்திலிங்கம்

5. மதுரவாயல் - வி.சீனிவாசன்

6. தாம்பரம் - ஆர். சுரேஷ்

7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - செ.முத்துராமன்

8. சோழிங்கநல்லூர் - ராம்குமார்

9. வானூர் (தனி) - ப.சங்கர்

10. மயிலம் - வி.ஆர்.ராஜசேகரன்

11. விக்கிரவாண்டி - சி.அன்புமணி

12. உளுந்தூர்பேட்டை - ராமமூர்த்தி

13. விழுப்புரம் - பழனிவேல்

14. செஞ்சி - கணேஷ்குமார்

15. கலசப்பாக்கம் - காளிதாஸ்

16. திருவண்ணாமலை - பாண்டியன்

17. கே.வி.குப்பம் (தனி) - குசலகுமாரி

18. குடியாத்தம் (தனி) - தீபா

19. அணைக்கட்டு - இளவழகன்

20. சோளிங்கர் - சரவணன்

21. திருப்பத்தூர் - ராஜா

22. வாணியம்பாடி - கிருபாகரன்

23. ராணிப்பேட்டை முரளி

24. ஆற்காடு - கரிகாலன்

25. அரக்கோணம் (தனி) - அற்புதம்

26. வேப்பனஅள்ளி - தமிழ்ச்செல்வி வரதராஜ்

27. ஊத்தங்கரை (தனி) - அங்குத்தி

28. தளி - கந்தசாமி

29. பர்கூர் - குமார்

30. எடப்பாடி - அண்ணாதுரை

31. ஆத்தூர் (தனி) - அம்சவேணி

32. திட்டக்குடி (தனி) - அர்ச்சுணன்

33. புவனகிரி - அசோக்குமார்

34. குறிஞ்சிப்பாடி - முத்துகிருஷ்ணன்

35. கடலூர் - தாமரைக்கண்ணன்

36. பண்ருட்டி - தர்மலிங்கம்

37. விருத்தாசலம் - தமிழரசி

38. நாகப்பட்டினம் - பால்ராஜ்

39. மயிலாடுதுறை - அய்யப்பன்

40. பூம்புகார் - அன்பழகன்

41. சீர்காழி (தனி) - பொன்.முத்துக்குமார்

42. தஞ்சாவூர் - குஞ்சிதபாதம்

43. பாபநாசம் - ஆலயமணி

44. பேராவூரணி - கலைவேந்தன்

45. பட்டுக்கோட்டை - லட்சுமி பாலு

46. திருவையாறு - கனகராஜ்

47. ஒரத்தநாடு - மா.சரவண அய்யப்பன்

48. திருவாரூர் - சிவக்குமார்

49. நன்னிலம் - இளவரசன்

50. புதுக்கோட்டை - வெள்ளைச்சாமி

51. விராலிமலை - க.கனகராஜ்

52. கந்தர்வக்கோட்டை (தனி) - பழனிமாணிக்கம்

53. திருச்சி மேற்கு - உமாநாத்

54. குளித்தலை - பாலசுப்ரமணியன்

55. கரூர் - முருகேசன்

56. குமாரபாளையம் - செல்வராஜ்

57. திருச்செங்கோடு - ராஜா

58. நாமக்கல் - துரைசாமி

59. ராசிபுரம் - புஷ்பகாந்தி

60. ஈரோடு மேற்கு - ஆறுமுகம்

61. ஈரோடு கிழக்கு - ராஜேந்திரன்

62. கோபிசெட்டிப்பாளையம் - குப்புசாமி

63. திருப்பூர் வடக்கு - சுப்பிரமணியன்

64. உடுமலைப்பேட்டை - துரைசாமி

65. காங்கேயம் - கருப்புச்சாமி

66. அவினாசி (தனி) - மாரிமுத்து

67. கோவை தெற்கு - பழனிச்சாமி

68. கோவை வடக்கு - காமராஜ் நடேசன்

69. சூலூர் - கணேசன்

70. தொண்டாமுத்தூர் - ஜெகநாதன்

71. குன்னூர் - மகேஷ் (எ) மகேந்திரன்

72. ஆத்தூர் - நிர்மலாஞானசவுந்தரி

73. ஒட்டன்சத்திரம் - சண்முகம்

74. நத்தம் - சீரங்கன்

75. பழனி - நாகராஜ்

76. போடிநாயக்கனூர் - ராமகிருஷ்ணன்

77. மதுரை கிழக்கு - அழகுராஜா

78. மதுரை வடக்க்ய் - ஆசைக்குமார்

79. மேலூர் - அப்துல் சலாம்

80. முதுகுளத்தூர் - இருளாண்டி

81. ராமநாதபுரம் - அப்துல்லத்திப்

82. காரைக்குடி - பி.ஆர்.துரைப்பாண்டி

83. சிவகங்கை - சந்திரக்கண்ணன்

84. திருச்சுழி - முனியசாமி

85. ஒட்டப்பிடாரம் (தனி) - முருகப்பெருமாள்

86. சங்கரன்கோவில் (தனி) - சுரேஷ்குமார்

87. வாசுதேவநல்லூர்ர் (தனி) - காசிப்பாண்டியன்

88. ராதாபுரம் - குருநாதன்

89. பத்மநாபபுரம் - சாஜி

90. நாகர்கோவில் - ஜார்ஜ்

பென்னாகரத்தில் வலுவான போட்டி:

பென்னாகரம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி போட்டியிடுகிறார். முன்னதாக இத்தொகுதியில் எம்.கே.வேலுமணி போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், பாமக சார்பில் அன்புமணி நிறுத்தப்படலாம் என்ற தகவல் கசிந்ததால் அதிமுக தரப்பில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திமுக சார்பில் பென்னாகரம் தொகுதியில் இன்பசேகரன் போட்டியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x