Last Updated : 25 Apr, 2016 02:05 PM

 

Published : 25 Apr 2016 02:05 PM
Last Updated : 25 Apr 2016 02:05 PM

போடி சட்டப் பேரவை தொகுதியில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி

போடி சட்டப்பேரவைத் தொ குதியில் அதிமுக, திமுக இடை யே கடுமையான போட்டி ஏற்பட் டுள்ளது.

தேனி மாவட்டம், போடி தொகு தியில் அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, பாமக, நாம் தமிழர் என 6 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக சார்பில் கடந்த 2001, 2006-ம் ஆண்டில் பெரியகுளம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு இந்த தொகுதி தனித் தொகுதியாக மாற்றி அமைக்கப்பட்டதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றதையடுத்து, தற்போது 4 முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2006-ம் ஆண்டில் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பார்த்திபனை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் லெட்சுமணன், 2011-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்திடம் தோல்வியைத் தழுவினார். இந்த முறை மீண்டும் லெட்சுமணன், ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

போடி தொகுதியில் கடந்த 1957, 1962, 1967-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், காங்கிரஸ் தொடர்ந்து மூன்றுமுறை வெற்றி பெற்றுள்ளது. அதன்பின் 1977,1980-ம் மற்றும் 1989, 1991-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 1991-ம் ஆண்டுக்குப் பின்னர் 2011-ம் ஆண்டு வரை நடந்த 4 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக, அதிமுக என ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி வெற்றி பெற்று வருகிறது.

தொடர்ந்து, எந்த கட்சியும் 1991-ம் ஆண்டுக்குப் பின்னர் வெற்றி பெறவில்லை, இந்த நிலையில், இரண்டாவது முறையாக தொடர் வெற்றியைக் கைப்பற்ற அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த முறை தோல்வியைத் தழுவிய திமுக வேட்பாளர் லெட்சு மணன் இம்முறை வெற்றியைத் தட்டி செல்ல வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து வருகி றார். இதற்கிடையில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து வைகோ, பிரேமலதா பிரச்சாரம் செய்து விட்டு சென்றனர்.

மாவட்டத்தில் இன்று விஜய காந்த் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர், இளம் பெண்கள் மத்தியில் தேமுதிகவுக்கு ஆதரவு பெருகி வருவதால் மக்கள் நலக் கூட்டணியினர் உற்சாகமாக உள்ளனர். பாஜக வேட்பாளர் வாக்குக்கு பணம் தரமாட்டேன். சேவைக்கு லஞ்சம் பெறமாட்டேன் என்ற கோஷத்துடன் கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வரு கிறார்.

பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அதிமுக, திமுக கட்சிகளின் கடந்தகால செயல்பாடுகளை விமர்சித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த தொகுதியில் 6 முனைப் போட்டி இருந்தாலும் அதிமுக, திமுக இடையே தான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x