நேர்மையின் சிகரம் ஜீவா

சிறுவன் ஜீவாவின் நேர்மையை பாராட்டி கவுரவிக்கும் எஸ்பி நாதா.
சிறுவன் ஜீவாவின் நேர்மையை பாராட்டி கவுரவிக்கும் எஸ்பி நாதா.
Updated on
1 min read

விழுப்புரம் அமைச்சார் அம்மன் கோயில் தெருவில் உமாபதி என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வரும் சிறுவன் ஜீவா(12). இவர், அங்குள்ள காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது, யாரோ தவறி விட்டுச் சென்ற பையை கண்டெடுத்தார்.

அதில், ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன், ஏடிஎம் கார்டுகள் இருப்பதைக் கண்டு, தனது பராமரிப்பாளரிடம் தெரிவித்தார்.

‘இந்தப் பையை போலீஸில் கொடுத்து விடலாம்' என்று சிறுவன்ஜீவா கூற, சிறுவனின் விருப்பப்படி அந்த கைப்பையை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் நேரில் சென்று ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர். சிறுவனின் செயலைப் பாராட்டிய கண்காணிப்பாளர், சிறுவனுக்கு சிறு பரிசளித்தார்.

கரோனாவால் பெற்றோர் உயிரிழப்பு

சிறுவன் ஜீவாவின் பெற்றோர் கரோனா நோய் தாக்கி 2020-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் உமாபதியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன கைப் பைக்கு உரியவர் யாராக இருந் தாலும், தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து, தங்களது பொருட்களை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in