

காரைக்குடி அருகே பள்ளத் தூரில் நடந்த கூட்டத்தில் பங் கேற்ற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை பெண்கள் முற்றுகையிட்டு ரேஷன் கடையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
பள்ளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக, திமுக சார்பில் தலா ஒருவர், 2 சுயேச்சைகள் என மொத்தம் 4 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இதையடுத்து 11 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் நேற்று பள்ளத் தூரில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
கூட்டம் முடிந்து மேடையில் இருந்து இறங்கிய அமைச்சரை, கூட்டத்துக்கு வந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர். அப்போது பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக வழங்கு வதில்லை. அரிசியை தனியார் ஆலைகளுக்கு கடத்திச் செல்கி ன்றனர். சமீபத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் தரமானதாக இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றனர்.
அவர்களிடம் பேசிய அமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அங்கிருந்து சென் றார்.
திமுக கூட்டத்துக்கு அக்கட் சியினர் அழைத்து வந்த பெண் களே, ரேஷன் கடை முறைகேடு குறித்து அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி கேட்டது பரபரப்பை ஏற் படுத்தியது.