Published : 10 Feb 2022 06:04 AM
Last Updated : 10 Feb 2022 06:04 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற உள்ள 1 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்.19-ம் தேதிஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதில் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சென்னை மாநகராட்சியில் மட்டும் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர்.
31,029 வாக்குச் சாவடிகள்
இத்தேர்தலில் 31 ஆயிரத்து29 வாக்குச் சாவடிகள் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக சென்னைமாநகராட்சியில் 5 ஆயிரத்து 794வாக்குச் சாவடிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி கடந்த 31-ம் தேதி நடை பெற்றது.
இப்பயிற்சியில் பங்கேற்காதவர்களுக்கு கடந்த 5-ம் தேதி பயிற்சி வழங்கப்பட்டது. 2-ம் கட்டபயிற்சி இன்று 234 இடங்களில் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர்களின் வாக்காளர் அட்டையை பரிசோதித்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல் உள்ளிட்ட பயிற்சி கள் வழங்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT