Published : 10 Feb 2022 07:50 AM
Last Updated : 10 Feb 2022 07:50 AM
செம்பாக்கம்: தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் உள்ளன. இதில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து திமுக களம் காண்கிறது. இந்த தேர்தலில் திமுகவில் உள்ளூர் செல்வாக்கு உள்ளவர்களுக்கும், முன்னாள் கவுன்சிலர்கள் பலருக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தமுள்ள 70 வார்டுகளில் 5-ல் திமுகவினர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சி 39-வது வார்டில் கிரிஜா சந்திரன் திமுகவில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே 2 முறை அதே பகுதியில் கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவரதுகணவர் சந்திரன் செம்பாக்கம் பேரூராட்சியாக இருந்தபோது தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார்.
இதேபோல் இவரது மகன் ஜெயபிரதீப் சந்திரன் 40-வது வார்டில் போட்டியிடுகிறார். இந்த 2 வார்டுகளிலும் திமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதால் அது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
திமுகவினர் கூறும்போது, "39-வது வார்டில் கிரிஜா சந்திரனுக்கு திமுக சார்பில் சீட் வழங்கப்பட்டது ஆனால், தன்னுடைய மகனுக்கும் சீட் வேண்டுமெனத் தொல்லை செய்ததால் இருவருக்கும் சீட்டுமறுக்கப்பட்டது. அதேபோல ஜெயபிரதீப் சந்திரன் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்டு நெருக்குதல் கொடுத்ததால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக 5 வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். ஆனால், திமுக நிச்சயமாக வெற்றி பெறும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT