Published : 10 Feb 2022 05:23 AM
Last Updated : 10 Feb 2022 05:23 AM

திட்ட வரைவை மத்திய அரசிடம் அளித்துள்ளோம்; சுற்றுலாத் துறையை மேம்படுத்தப்போகிறோம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

சுடுகளிமண் சிற்பப் பூங்காவில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள் குறித்து ஆளுநர் தமிழிசையிடம் பத்ம விருது பெற்ற சுடுகளிமண் சிற்பக் கலைஞர் முனுசாமி விளக்குகிறார்.படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

புதுவை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சில திட்டவரைவுகள் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்குஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளதால் புதுச்சேரி மாநில பொருளாதாரம் உயரும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுடுகளிமண் சிற்பப் பூங்காவினை துணை நிலை ஆளுநர் தமிழிசை நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், கலை மற்றும் கைவினை கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள 40 கிலோவாட் சூரிய சக்தி உற்பத்தி நிலையத்தையும் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பத்ம விருது பெற்ற சுடுகளிமண் சிற்பக் கலைஞர் முனுசாமி, அதிகாரிகள் மற்றும் கலைஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர் களிடம் ஆளுநர் தமிழிசை கூறுகையில், "பட்ஜெட்டிலும் புதுச்சேரிக்கான சுற்றுலாத் திட்டங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சில திட்டவரைவுகள் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் சில திட்டங்கள் கிடைக் கவும் வாய்ப்பிருக்கிறது. சுற்று லாத்துறையை மேம்படுத்தும் போது புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் உயரும். கலை மற்றும் கைவினை கிராமத்தில் ரூ. 35 லட்சம் செலவில் களிமண்சிற்பப் பூங்கா ஏற்படுத்தப்பட்டி ருக்கிறது. புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் வகையில், களிமண் சிற்பத்திற்கு ‘புவிசார் குறியீடு’ கிடைத்திருக்கிறது. இது புதுச் சேரிக்கான பெருமை.

தற்போது, ரூ. 5 கோடி செலவில் 40 கி.வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிக்கிறது. இயற்கை வழியாக மின் உற்பத்தி செய்யும் திட்டங்களும் வர இருக்கின்றன. வளர்ச்சியடைந்த, புதுமையான மாநிலமாக புதுச்சேரி மாறுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிகளுக்கு சில திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று என்னிடம் கேட்டிருந்தார்கள். அரசு அவர்களுக்கு முழுமையான ஆதரவு அளிக்கும். முதல்வரும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். சுயேச்சை எம்எல்ஏக்கள் யாரும் அதிருப்தியாக இல்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x