Published : 10 Feb 2022 05:28 AM
Last Updated : 10 Feb 2022 05:28 AM
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை யொட்டி பண்ருட்டி நகராட்சிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றை அந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் பணி நேற்று நடைபெற்றது.
அதையொட்டி விருத்தாசலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல, கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி, நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை, மங்கலம்பேட்டை, கெங்கை கொண்டான் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து வாகனங்கள் விருத்தாசலத்திற்கு வந்திருந்தன. அவற்றில் பண்ருட்டி நகராட்சி அலுவலகத்திலிருந்து, குப்பைஅள்ளுவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ஏற்றிச் செல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் எவ்வித பாதுகாப்பும் இன்றி மின்னணு வாக்குப்புதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் மற்ற நகராட்சி. பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து வேன் மற்றும் சிறிய ரக லாரி கொண்டுவரப்பட்டு அதில் ஏற்றிச் செல்லப்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
இதுதொடர்பாக பண்ருட்டி நகராட்சி அலுவலர்களிடம் பேசியபோது, "தேர்தல் சிக்கன நடவடிக்கையாக இருக்கின்ற வாகனத்தை பயன்படுத்தும் நிலை உள்ளதால், குப்பை அள்ளும் வாகனத்தில் அவைகள் எடுத்து வரப்பட்டன" என விளக்கமளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT