

மீண்டும் உள்ளாட்சித்தேர்தல் பணிகள் புதுச்சேரியில் தொடங்கியி ருக்கிறது. நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களை மாநில தேரதல் ஆணையர் ராய் பி. தாமஸ்நியமித்துள்ளார்.
புதுச்சேரியில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்துள்ளன. கடந்த 2011ல் நடந்திருக்க வேண்டிய தேர்தல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற இருந்தது. ஆனால், உள்ளாட்சிகளுக்கான இடஒதுக்கீடு முறை தொடர்பாக சில அமைப் புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர, அதைத் தொட்டு அனைத்துக் கட்சிகள் எதிர் குரல் எழுப்ப தேர்தல் தள்ளிப் போனது.
இச்சூழலில், நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் உள்ளாட்சித்தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள் ளது. நேற்று நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணை யர் ராய் பி தாமஸ் உத்தரவு பிறப் பித்துள்ளார்.
அதன்படி, புதுச்சேரி நகராட் சிக்கு தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஆணையர், உழவர்கரை நகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி இணை தலைமை செயல் அதிகாரி, காரைக்காலுக்கு துணை ஆட்சியர் (வருவாய்), மாஹே மற்றும் ஏனாமுக்குமண்டல நிர்வாக அதிகாரி ஆகி யோர் நியமிக்கப்பட் டுள்ளனர்.
அதேபோல் கொம்யூன் பஞ்சா யத்துகளுக்கு நியமிக்கப்பட்டோர் விவரம்:
அரியாங்குப்பம்- பிடிஓ அரியாங்குப்பம், பாகூர்- துணை போக்குவரத்து ஆணையர் புதுச்சேரி, மண் ணாடிப்பட்டு- வீட்டுவசதிவாரியம் திட்ட செயலாக்க அலுவலர், நெட் டப்பாக்கம்- தொழிலாளர் துறை துணை ஆணையர், வில்லியனூர்- சர்வே இயக்குநர், கோட்டுச்சேரி- வேளாண்துறை கூடுதல் இயக்குநர்-காரைக்கால், நிரவி- காரைக்கால் மீன்வளர்ச்சித்துறை துணை இயக்குநர், நெடுங்காடு- பிடிஓ, திருநள்ளாறு- குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர், டிஆர்பட்டினம்- காரைக்கால் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் நிய மிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விரைவில் புதுச்சேரி யில் உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.