

புதுச்சேரி பாஜகவின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துமுன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு கூறியதாவது:
இரு தினங்களுக்கு முன்பு அரியாங்குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இஸ்லாமிய மாணவியை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என பேசியுள்ளார். அனைத்து மதத்தினருக்கும் அவர்களது மத கோட்பாடு, கலாச் சாரத்தை கடைபிடிக்க உரிமை உண்டு. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள நிலையை இங்கு உருவாக்கக் கூடாது.
வாதானூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்வி அமைச்சரின் தொகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆர்எஸ்எஸ் கலாச்சாரத்தை பள்ளிகள் மூலமாக புதுவையில் நுழைப்பதற்கான வேலையை பாஜக மறைமுகமாக செய்கிறது. கல்வித்துறையை முதல்வர் ரங்க சாமி தன் கையில் எடுத்துக் கொண்டு, இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் பாஜகவின் ஏஜென்ட்
பாஜகவுக்கு ஆதரவு தந்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், தங்களது தொகுதிகளில் எந்தவித வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை என்றுபேரவைத் தலைவரையும், ஆளுநரையும் சந்தித்து வருகின்றனர். இது பாஜகவுக்கும், 3 சுயேச்சைஎம்எல்ஏக்களுக்கும் உள்ள பிரச் சினை. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது சம்பந்தமாக முதல்வரிடம்தான் முறையிடவேண்டும். ‘எந்த அரசியல் கட்சி யையும் சேர்ந்தவன் அல்ல’ என்றுபதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பிறகு பாஜக அலுவலகத்துக்கு செல்வதும், பாஜக போராட்டங்களில் கலந்து கொள்வதும் பேரவைத் தலைவர் செல்வத்துக்கு அழகல்ல.
அவர் பாஜவின் ஏஜென்டாக செயல்படாமல், பதவியை ராஜி னாமா செய்துவிட்டு, வெளியே வந்து பாஜக அரசியலை செய்ய லாம என்று தெரிவித்தார்.