மதுரையின் வளர்ச்சிக்கு திமுகவை ஆதரியுங்கள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம்

மதுரையின் வளர்ச்சிக்கு திமுகவை ஆதரியுங்கள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம்
Updated on
1 min read

மதுரை மாநகராட்சி 57-வது வார்டு திமுக வேட்பாளர் இந்திராணியை ஆதரித்து ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச் சாரத்தைத் தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த குழப்பமான வார்டு மறுவரையறையில் திருப்தி இல்லாதபோதும்கூட, மக்களின் அடிப்படைத் தேவைகளை மனதில் கொண்டு இந்தத் தேர் தலை கட்டாயமாக நடத்தியே தீர வேண்டும் என்ற சூழல் ஏற்பட் டுள்ளது.

மதுரை மத்திய தொகுதியில் 16 வார்டுகளில் 13 பெண்கள் மாமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

மதுரைக்கு நல்ல மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள். வாக்குக்குப் பணமே தராமல் இரண்டு முறை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக என்னைத் தேர்ந் தெடுத்தீர்கள். எதிர்க்கட்சி வரி சையில் இருந்தபோதே தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அதிகளவு திட்டப்பணிகளை நிறை வேற்றி பெயர் பெற்றேன்.

மதுரையின் வளர்ச்சிக்காக இன்னும் பல்வேறு திட்டப் பணி களை முதல்வரின் ஒப்புதலோடு செயல்படுத்திட உள்ளோம். ஏற் கெனவே மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்குப் பணிக்காக ரூ.25 கோடி, ஒருங்கிணைந்த குடிநீர் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை நிறைவேற்ற ரூ.500 கோடி என முதல்வர் அறிவி த்துள்ளார். அந்தப் பணிகளை எல்லாம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்திட திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in