

பாஜக செயல்வீரர்கள் கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜகவால் மட்டுமே தமிழகத்தை ஊழலில் இருந்து காப்பாற்ற முடியும். இதுவரை ஆட்சி செய்த அதிமுக - திமுக போன்ற கட்சிகள் தமிழகத்தை சீர்குலைத்து விட்டன.
தமிழகத்துக்கு என தனி பாரம்பரியம் இருந்தது. அதை திராவிடக்கட்சிகள் கெடுத்து விட்டன. மது ஆறாக ஓடுகிறது. தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, தொழிற்சாலைகள் இல்லை, சுகாதாரம் இல்லை. மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், டில்லி போன்ற மாநிலங்களில் ஊழல் இல்லாத அரசை பாஜக வழங்கியுள்ளது. அதேபோன்ற ஆட்சியை தமிழகத்தில் நாங்கள் கொண்டு வருவோம். ஓட்டு மொத்த வளர்ச்சியை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.