Published : 09 Feb 2022 05:39 AM
Last Updated : 09 Feb 2022 05:39 AM
சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, ‘சுகன்யா சம்ரிதி’ எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். குறைந்த சேமிப்புத் தொகை, அதிக வட்டி, கணக்கை முடிக்கும்போது 3 மடங்கு தொகை என பல்வேறு பலன்கள் உள்ளதால், ஏராளமானோர் இத்திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர்.
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 2021-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 1.42 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 29.12 லட்சம் புதிய கணக்குகளை தொடங்கி உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்திலும், 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தமிழகம்2-ம் இடத்திலும் உள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT