Published : 09 Feb 2022 05:48 AM
Last Updated : 09 Feb 2022 05:48 AM

‘இந்து தமிழ் திசை’, பெருந்துறை நிவேதா கலை கைவினைக் கழகம் நடத்தும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம்; பிப்.24-ல் தொடக்கம்: 3 நாட்கள் பயிற்சியில் பூ வேலைப்பாடுகள் கற்றுத் தரப்படும்

சென்னை: அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக, ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் பல்வேறுசெயல்பாடுகளை இணையம்வழியாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பெருந்துறை நிவேதா கலைமற்றும் கைவினைக் கழகத்துடன்இணைந்து, பூ வேலைப்பாடுகளைக் கற்றுத்தரும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கை 3 நாட்கள்நடத்துகிறது. அதன்படி பிப்.24, 25, 26ஆகிய நாட்களில் மாலை 6.00 முதல்7.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஓரிகாமி பயிலரங்கில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் முதல், பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளும் பங்கேற்கலாம். இந்தப் பயிலரங்கை நடத்தவுள்ள நிர்மல்குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகஓரிகாமி பயிற்சிகளைத் திறம்பட நடத்தி வருபவர். இந்த பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகளைக் கற்றுத்தர உள்ளார்.

இந்த பூக்கள் செய்யும் ஓரிகாமி கலையை கற்பதன் மூலமாக உங்கள் திறமையை வளர்க்கும் நரம்பு மண்டலம் நன்றாக வேலை செய்யும். இந்த பயிற்சி உள் அலங்காரங்கள் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பயிற்சியில் பங்கேற்கையில் போதுமான இடவசதியுடன், நல்ல வெளிச்சமுள்ள மேசையில் அமர்ந்திருக்க வேண்டியது அவசியம்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/00250 என்ற லிங்க்கில் ரூ.294/- பதிவுக் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x