

சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நேற்று நடந்த தேரோட்டாத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த 22-ம் தேதி தொடங்கியது.
இந்த திருவிழாவின் முக்கிய் நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் நேற்றைய தினம் காலை நடந்தது. திருத்தேரில் பெருமாள் காலை 7 மணியளவில் எழுந்தருளினார். காலை 7.30 மணியளவில் கோவிந்தா, கோவிந்தா என பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாரே தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேர் சரியாக காலை 8.15 மணிக்கு நிலையில் வந்து நின்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வான கண்ணன் வெண்ணெய்த்தாழி நிகழ்வு இன்று காலை 6.15 மணிக்கு நடக்கவுள்ளது. இன்றிரவு 8 மணிக்கு குதிரை வாகன ஊர்வலம் நடக்கவுள்ளது.