அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இருதரப்பும் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் நடந்த உள்கட்சி தேர்தலில் கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக கே.பழனிசாமியும் கடந்த டிச.6 அன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதை எதிர்த்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது இதுதொடர்பாக இருதரப்பிலும் பதில்மனுக்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை மார்ச் 8-க்கு தள்ளி வைத்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in