Published : 09 Feb 2022 08:37 AM
Last Updated : 09 Feb 2022 08:37 AM
புதுச்சேரி முருங்கப்பாக்கம் காமராஜர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவிசாந்தி. இவர் பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பில்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மாதம் 6-ம் தேதி,பிள்ளைகளின் படிப்பு செலவிற் காக, மருத்துவமனை வாசலில் உள்ள ஏடிஎம்மில் ரூ. 10 ஆயிரம் பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் அவர் அங்கி ருந்து சென்று விட்டார். பின்னர் வங்கியில் புகார் தெரிவித்தார்.
இதனிடைய புவனகிரி சிலம்பிமங்களத்தைச் சேர்ந்த சந்திரகுமார் அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது, வெளியில் பணம் இருப்பதை பார்த்து, அதிலிருந்த ரூ. 10 ஆயிரத்தை கிரு மாம்பாக்கம் காவல் நிலை யத்தில் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.
இதுதொடர்பாக கிருமாம்பாக் கம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந் தம் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே சாந்தி வங்கியில் புகார் தெரி வித்திருந்த நிலையில் அது குறித்து வங்கி அதிகாரிகள் போலீ ஸாருக்கு தெரிவித்தனர்.
விசாரணையில் அந்த பணம் சாந்தி கணக்கிலிருந்து வெளிவந்த பணம் என்பது தெரிய வந்ததது. இதையடுத்து, நேற்று அந்த பணத்தை வங்கி ஊழியர் ராமராஜ் முன்னிலையில், சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சாந்தியிடம் ஒப்படைத்தார். பணத்தை கொடுத்த சந்திரகுமாரை போலீஸார் பாராட்டினர்.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT