

திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவர பிரச் சாரத்துக்கு செல்லும்போது காய் கறிகள் விற்பது, கடைகளில் சப்பாத்தி, வடை சுடுவது, மண் வெட்டி எடுத்து சாக்கடைகளை சுத்தம் செய்வது எனப் பல்வேறு விதங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளில் போட்டியிடும் திமுக, அதிமுக, சுயேச்சை வேட் பாளர்கள் பிரச்சாரம் செய்து வரு கின்றனர்.
அப்போது வாக்காளர்களுக்கு துண்டு அணிவிப்பது, வாக்குறுதி கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்குகின்றனர். பிரச்சாரத்துக்கு செல்லும் வழியில் ஓட்டல்களைக் கண்டால் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளியை ஓரங்கட்டிவிட்டு சப்பாத்தி சுடும் பணியில் ஈடுபடுவது எனப் பல்வேறு யுக்திகளை திமுக வேட்பாளர் இந்திராணி கையாண்டு வருகிறார்.
காய்கறிகள் விற்பனை செய்யும் பெண்ணை எழுந்திருக்கச் செய்து சிறிது நேரம் காய்கறி விற்பனை யிலும் ஈடுபடுகிறார்.
டீக்கடைப் பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது வடை சுடுவது என அதிமுக வேட்பாளர் பொன்முத்து வாக்கு சேகரிக் கிறார். சுயேச்சை வேட்பாளர் மார்த்தாண்டம் தனது சின்னமான தென்னை மரக்கன்றை கையுடன் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்கி றார்.
மற்றொரு சுயேச்சை வேட்பாளர் வெங்கடேஷ் பிரச்சாரத்தின்போது மண் வெட்டியுடன் களம் இறங்கி தேங்கியுள்ள சாக்கடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வாக்காளர்களைக் கவர முயற்சி செய்தார். இதேபோல் வேட் பாளர்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர்.