Published : 19 Apr 2016 08:31 AM
Last Updated : 19 Apr 2016 08:31 AM

2-ம் கட்ட பட்டியல் வெளியீடு: 20 தொகுதிகளுக்கான எஸ்டிபிஐ வேட்பாளர்கள்

எஸ்டிபிஐ கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 20, புதுச்சேரியில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் இருந்து விலகிய எஸ்டிபிஐ கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 2-ம் கட்டமாக தமிழகத்தில் 20 தொகுதிகள், புதுச்சேரியில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி சென்னையில் நேற்று அறிவித்தார். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

சேலம் வடக்கு - ஏ.அம்ஜத் பாஷா, சிதம்பரம் - ஜி.அப்துல் சத்தார், தாம்பரம் - எஸ்.முகமது பிலால், திருவெறும்பூர் - எஸ்.சம்சுதீன், பழநி - ஏ.கைசர், அரவக்குறிச்சி - ஆர்.முகமது மிர்ஜா, பட்டுக்கோட்டை - இசட்.முகமது இலியாஸ், பாபநாசம் - ஏ.முகமது ஃபாரூக், ஓசூர் - என்.ஷாநவாஸ், அறந்தாங்கி - பி.எம்.எஸ்.குலாம் முகமது, திருப்பூர் தெற்கு - ஜே.பஷீர் அஹமது, மதுரை தெற்கு - நஜ்மா பேகம், மதுரை மத்தி (வேட்பாளர் மாற்றம்) - எம்.ஜாபர் சுல்தான், ஈரோடு கிழக்கு - கே.சாதிக் பாஷா, மேட்டுப்பாளையம் - எம்.எஸ்.முகமது ரஃபி, மேலூர் - எஸ்.ரிஷி கபூர், கிணத்துக்கடவு - ஏ.அப்துல் கரீம், கோவை தெற்கு - வி.எம்.அபுதாஹிர், தொண்டாமுத்தூர் - ஏ.அன்சர் ஷரீப்.

பாண்டிச்சேரி மாநிலம் வில்லியனூர் - ரபீக் மன்சூர், காரைக்கால் தெற்கு - முகமது பிலால், நிரவி திரு.பட்டினம் - சுல்தான் கவுஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x