Published : 08 Feb 2022 07:47 AM
Last Updated : 08 Feb 2022 07:47 AM

பி.சி., எம்பிசி மாணவர்களுக்கே நீட் தேர்வால் அதிக பலன்: பாஜக செய்தி தொடர்பாளர் கருத்து

சென்னை: தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வால் சமூகநீதி பாதிக்கப்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு தமிழகத்தில் எம்பிபிஎஸ் அனுமதியில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய இடங்களுக்கு, வகுப்பு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் கிடைத்த இடங்கள் குறித்த புள்ளி விவரம் இவர்களின் கோரிக்கை தவறானது என்பதை தெளிவாக்குகிறது.

எஸ்.டி. வகுப்பினருக்கு 29 இடங்கள் ஒதுக்கி 29 இடங்கள் கிடைத்துள்ளன. எஸ்.சி. பிரிவுக்கு 421 இடங்கள் ஒதுக்கி, 431 இடங்களும், எம்.பி.சி.க்கு 560 இடங்கள்ஒதுக்கி, 694 இடங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு 84 இடங்கள் ஒதுக்கி 119 இடங்களும், பி.சி. வகுப்பினருக்கு 757 இடங்கள் ஒதுக்கி 1,340 இடங்களும், இதர வகுப்பினருக்கு 869 இடங்கள் ஒதுக்கி 107 இடங்களும் கிடைத்துள்ளன. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 31 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ள இதர வகுப்பினருக்கு 3.8% இடங்களே கிடைத்துபாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களே அதிகமாக பலன் அடைந்துள்ளனர். இதில் எங்கிருந்து சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x