Published : 08 Feb 2022 07:13 AM
Last Updated : 08 Feb 2022 07:13 AM

பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வசதியாக தேர்தல் பார்வையாளர் எண்கள் வெளியீடு: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் வட்டார பார்வையாளர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி தேர்தல் பணிகளை பார்வையிட வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு 3 மாவட்ட பார்வையாளர்கள் மற்றும் 15 மண்டலங்களுக்கு தலா ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பாக அவர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி வடக்கு வட்டார தேர்தல் பார்வையாளரை 94450 36552 என்ற எண்ணிலும், மத்திய வட்டார பார்வையாளரை 94450 36532 என்ற எண்ணிலும், தெற்கு வட்டார பார்வையாளரை 94450 36512 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும் திருவொற்றியூர் மண்டல பார்வையாளர்- 94450 71035, மணலி மண்டல பார்வையாளர்- 94450 71036, மாதவரம் மண்டல பார்வையாளர்-94450 71037, தண்டையார்பேட்டை மண்டல பார்வையாளர்- 94450 71038, ராயபுரம் மண்டல பார்வையாளர்-94450 71039, திரு.வி.க.நகர் மண்டல பார்வையாளர்- 94450 71043, அம்பத்தூர் மண்டல பார்வையாளர்-94450 71044, அண்ணாநகர் மண்டல பார்வையாளர்- 94450 71045, தேனாம்பேட்டை மண்டல பார்வையாளர்- 94450 71047, கோடம்பாக்கம் மண்டல பார்வையாளர்- 94450 71048, வளசரவாக்கம் மண்டல பார்வையாளர்- 94450 71051, ஆலந்தூர் மண்டல பார்வையாளர்-94450 71052 , அடையார் மண்டல பார்வையாளர்- 94450 71053, பெருங்குடி மண்டல பார்வையாளர்- 94450 71054, சோழிங்கநல்லூர் மண்டல பார்வையாளர் - 94450 71055 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x