சென்னை விமான நிலையத்தில் 2.5 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 2.5 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் பறிமுதல்
Updated on
1 min read

அபுதாபியில் இருந்து கடத்திவரப் பட்ட 2.5 கிலோ தங்கம், சிங்கப் பூருக்கு கொண்டுசெல்ல முயன்ற ரூ.20 லட்சம் ரொக்கம் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப் பட்டது.

சென்னை விமான நிலை யத்துக்கு அபுதாபியில் இருந்து ஒரு விமானம் நேற்று அதிகாலை வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சதீஷ் (21) என்பவர் சுற்றுலா விசாவில் அபுதாபி சென்றுவிட்டு திரும்பினார். டீ கேன் ஒன்றை அவர் வைத்திருந்தார். அதை திறந்து சோதனை செய்தபோது, தலா 100 கிராம் எடையில் 25 தங்கக் கட்டிகள் இருந்தன. மொத்தம் 2.5 கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ.75 லட்சம்.

தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சதீஷை கைது செய்தனர்.

ரூ.20 லட்சம் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு விமானம் புறப்பட தயாராக நின்றது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்கு செல்ல இருந்த சென்னையை சேர்ந்த கணேஷ் (34), குமார் (43) ஆகியோரது சூட் கேஸ், பைகளை சோதனை செய்த போது கட்டுக்கட்டாக பணம் கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.20 லட்சம் பணம் இருந்தது. அதுசம்பந்தமாக அவர்களிடம் எந்த ஆவணங் களும் இல்லை. இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in