

திருச்சி: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் போற்றும் வகையில் இடம் பெற்ற 2 அலங்கார ஊர்திகள் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தன.
இந்த ஊர்திகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வரவேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ஊர்திகளை பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த ஊர்தி இன்றும் மக்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருக்கும். மேலும், இன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள் அலங்கார ஊர்திகளையும், கலை நிகழ்ச்சிகளையும் வந்து பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.